பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
-----------------------------------------
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
3 comments:
nice reading here.. check this out, this blog would help u by any chance..
http://tamilkavinganlyrics.blogspot.com/
இப்பதான் இந்தப் பக்கம் வந்தேன்..
இனி பாடல்கள் கேட்க வருவேன் தொடர்ந்து.
அருமையான பாடல்.. பதிவேற்றியமைக்கு நன்றிகள்!
பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டுகொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன்...
என்ற பாடல் தெரியுமா? இணையத்தில் தேடி கிட்டவில்லை. இருந்தால் பதிவேற்றுங்கள் டாக்டர்!
Post a Comment