Saturday, July 16, 2011

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு


படம்-வசந்தத்தில் ஒர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ,வாணி ஜெயராம்

ஆஆஆஆ
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ளவரையில்
வெண் பனி தென்றல் உள்ளவரையில்.

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வென்பனி தென்றல் உள்ள வரையில்

உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.

0 comments: