படம் -நவராத்திரி
இசை-K.V.மகாதேவன்
பாடியவர் - டி.எம்.சவுந்தரராஜன்
எழுதியவர் -கண்ணதாசன்,.
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன
உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன
எனக்கும் புரியாது
இருப்பது சில நாள்
அனுபவிப்போமே
எதுதான் குறைந்துவிடும்
எதுதான் குறைந்துவிடும்
பாவம் என்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை
கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அருகே வரலாமா
கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா
கல்லினில் வடித்த சிலைகளை பார்த்தால்
மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை
எவர் இதை மறந்துவிட்டார்
.
0 comments:
Post a Comment