Saturday, June 25, 2011

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது



படம்: பாவ மன்னிப்பு.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி. சுசீலா.



பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

கட்டவிழ்ந்த கண் இரண்டும் உங்களை தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை பெண்மனது போர்களம் ஆகும்

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
தெய்வமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

0 comments: