Wednesday, June 29, 2011

கொடியசைந்ததும் காற்று வந்ததா

படம்: பார்த்தால் பசி தீரும்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம். செளந்தர்ராஜன், பி.சுசீலா.



கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

(கொடியசைந்ததும்...)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்தது ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா

(கொடியசைந்ததும்...)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா
ஓடிவந்ததும் தேடி வந்ததௌம்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா உரிமை என்பதா

(கொடியசைந்ததும்...)

0 comments: