Wednesday, June 29, 2011

இரு பறவைகள் மலை முழுவதும்

படம் : நிறம் மாறாத பூக்கள்
குரல் : ஜென்சி
இசை : இளையராஜா

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன

பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாத பூந்தென்றலே
எங்கெங்கும் இதுபோல சோகங்களே
தீராதோ இது மாறாதோ
கலைந்தது கவிதைகள் ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே


படம் : பார் மகளே பார்
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி


நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....

நீரோடும்....

மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கள மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையில் தந்தை
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலில் மேலே ....
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்....

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துனையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்...

கொடியசைந்ததும் காற்று வந்ததா

படம்: பார்த்தால் பசி தீரும்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம். செளந்தர்ராஜன், பி.சுசீலா.



கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

(கொடியசைந்ததும்...)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்தது ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா

(கொடியசைந்ததும்...)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா
ஓடிவந்ததும் தேடி வந்ததௌம்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா உரிமை என்பதா

(கொடியசைந்ததும்...)

உறவுகள் தொடர்கதை



படம்: அவள் அப்படித்தான்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்



உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

(உறவுகள் தொடர்கதை...)

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

(உறவுகள் தொடர்கதை...)

சொல்லாமல் தெரிய வேண்டுமே

பாடல்: சொல்லாமல் தெரிய வேண்டுமே
திரைப்படம்: விளையாட்டுப் பிள்ளை
இசை: மகாதேவன்
பாடியவர்: எஸ்.ஜானகி

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
மறு முறை காணவே மனமும் சென்றது
மறு முறை காணவே மனமும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

தேடிய செல்வம் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது
பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்


பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

படம்: மணப்பந்தல் (1962)
கண்ணாதாசன் 

விஸ்வ‌நாதன் ‍ ராமமூர்த்தி

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

Saturday, June 25, 2011

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா



ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
 ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா


படிசிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன்
படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான் காவல் இருந்தான்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா


பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களை போல் காத்து வளர்த்தார்
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களை போல் காத்து வளர்த்தார்

உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார்
உண்மை அன்பு சேவை என்று மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார் தானும் இருந்தார்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை

நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா நாய்கள் மேலடா

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது



படம்: பாவ மன்னிப்பு.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: பி. சுசீலா.



பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

கட்டவிழ்ந்த கண் இரண்டும் உங்களை தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை பெண்மனது போர்களம் ஆகும்

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
தெய்வமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே

(பாலிருக்கும் பழமிருக்கும்...)

வசந்தத்தில் ஓர் நாள்





படம் :மூன்று தெய்வங்கள் (1971)
பாடியவர் :P.சுசீலா
இசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்
இராகம் : தர்பாரி கானடா

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

தேவி வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு மான் விளையாட X 2
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை X 2
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் X 2
காவலில் நின்றிருந்தாளோ தேவி
காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே

பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி

தேவி வைதேகி காத்திருந்தாளோ X 2

வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி


http://www.youtube.com/watch?v=ld089m7EDaA&NR=1




ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹொ ஓ ஓ ஓஓ ஹோ 

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி 
ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
என்னை எடுத்து தன்னை கொடுத்து 
போனவன் போனாண்டி ஓ ஓ ஹோய் 
ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ...... 

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனாண்டி 
போனவன் போனாண்டி 
ஏக்கத்தை தீர்க்க ஏனென்று கேட்க்க வந்தாலும் வருவாண்டி 
வந்தாலும் வருவாண்டி.....ஹோய் 
.போனவன் போனாண்டி..ஹோய்..ஹோய்..ஹோய் 
போனவன் போனாண்டி 
என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 

ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா 

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி.. ஓய் 
நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி 
வந்தாலும் வருவாண்டி..ஹொய் ஹோய் ஹோய்...வந்தாலும் வருவாண்டி 
ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா 

ஆசை மனசுக்கு வாசலை வைத்து போனவன் போனாண்டி 
போனவன் போனாண்டி 
வாசலை தேடி வாழ்துக்கள் பாடி வந்தாலும் வருவாண்டி..ஹோய் 
வந்தாலும் வருவண்டி ஹோய் ஹோய் ஹோய் 
போனவன் போனாண்டி 

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி 
ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி 
ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ......
----------------------------------------------------



இயற்றியவர்: கவிஞர் வாலி
திரைப்படம்: படகோட்டி 

இசை :எம்.எஸ்.வி 

*

வளர்ந்த கலை மறந்துவிட்டாள் - பாடல்











வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா?
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா?

வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா? - தாலி
கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா?

காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்த
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா?
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா? - அதை
மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா?

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா? - அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா? - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா?

வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

•••••••
 
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
திரைப்படம்: காத்திருந்த கண்கள்
நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி