பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
அன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
படம் - பறக்கும் பாவை பாடியவர்கள் - டி.எம்.எஸ், பி. சுசீலா இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே உன் நிழல் தேடி வளர்ந்தேனே ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவ்னில் ஆட புதுமைகள் காண காண்போமே என்னாலும் திருநாள்
உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு கோபம் வேதம் மாறாதோ மாறும் நன்னாள் என்னால் காண்பேனோ புன்னகையாலே என்னை மாற்று பொன்னழகே நீ பூங்காற்று
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவ்னில் ஆட புதுமைகள் காண காண்போமே என்னாலும் திருநாள்
மங்கல நான் வேண்டும் மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் கீதம் நானாக
மங்கல நான் வேண்டும் மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் கீதம் நானாக காவியம் போலே வாழ்ந்திருப்போம் ஆயிரம் நிலவை பார்த்திருப்போம் ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவ்னில் ஆட புதுமைகள் காண காண்போமே என்னாலும் திருநாள்
படம்: உரிமைக்குரல்
இசை: மெல்லிசை மன்னர்
இயக்கம்: ஸ்ரீதர்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள் - கே.ஜெ. ஏசுதாஸ், பி. சுசீலா
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது...)
மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக்கூடும் உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது...)
கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது பூஜை யார் செய்வது - இந்தப் பூவை யார் கொள்வது ஊமைக்கு வேறேது பாஷை? உள்ளத்தில் ஏதேதோ ஆசை உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது...)
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம் உனக்காகவே நான் வாழ்கிறேன்
படம்: கவலை இல்லாத மனிதன் பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு இயற்றியவர்: கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் -----------------------------------------
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் இரவின் கண்ணீர் பனித்துளி என்பார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம் பெரும்பேரின்பம்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
--------------------------------------------------------
படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்
பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)