Saturday, June 23, 2012

பாரடி கண்ணே கொஞ்சம்..









படம் - வல்லவனுக்கு வல்லவன்

குரல்கள் - சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, டி.எம்.எஸ்
பாடல் - கண்ணதாசன்
இசை - வேதா
நடிகர்கள் - அசோகன், மனோகர், சாவித்திரி



பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)

பைத்தியமே கொஞ்சம் நில்லு
வைத்தியரிடம் போய் சொல்லு
நெருங்காதே இது முள்ளு
தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)

அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா ஓ
அந்தர லோகத்து பெண்ணா

உடையைப் பார்த்தவுடன் மனது பாதி கெட்டு
இடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு .. மீதி கெட்டு
ஆ மனிதனான என்னை மடையனாக்கி விட்டு
மறைத்து மூடி விட்டு முறைத்துப் பார்ப்பதென்ன.. பார்ப்பதென்ன
ஆ உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு
ஆ உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு.. ஓடவிட்டு
ஆ துடிக்கும் ஏழை நெஞ்சை அடக்கித் தூங்க விட்டு
ஆ நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு
அடி வாடி என் சிட்டு

அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா ஓ
அந்தர லோகத்து பெண்ணா
அந்தர லோகத்து பெண்ணா

அழகுக்கு ஏனடி வஞ்சம் அடி
அழகுக்கு ஏனடி வஞ்சம்
அடைந்து விட்டோமடி தஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)

ஆசையை பாரடி தங்கம்- இவர்
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ

அறுபதாக இவர் அழகு தோன்றுதடி.. தோன்றுதடி
இருபதாக இவர் மனது மாறுதடி.. மாறுதடி
ஒருவராக வர வீரம் இல்லையடி.. இல்லையடி
ஆ இருவராக வன்ந்து ஏய்க்கப் பார்க்குதடி.. பார்க்குதடி
ஆண்களாக இவர் தோன்றவில்லையடி.. இல்லையடி
ஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி.. இல்லையடி
பெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதை
பெருமையாக கருதும் வீரரடி

ஆசையை பாரடி தங்கம்- இவர்
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ
அழகிலே ஆனா சிங்கம் ஹோ ஹோ

மாப்பிள்ளை ராஜா நில்லு
என் வார்த்தைக்கு பதில் சொல்லு
நெருங்காதே இது முள்ளு
தருவதை வாங்கி கொள்ளு (பைத்தியமே) (பாரடி)


••

Wednesday, April 11, 2012

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை






புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இது
புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
(லொளலொளலொளாயி)
அஞ்சுக்குப் பின்னாலே வந்த பிள்ளை - இது
ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை;
கணவன்: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய பிள்ள ஆராரோ

புருசஷன் மனதிலே பூத்திருந்தேன்
ஆமாமா
தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
ஆமாமா
வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் - இப்போ
வயசு இருபத்தி ஆறாச்சு
ஐயய்யோ ஐயையோ ஆராரோ - ஒங்க
அம்மா கதைய நீ கேளாயோ?
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பிள்ள ஆராரோ

ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் - பாழும்
காதலினாலே திரும்பி வந்தேன்
போகாது ஐயா, போகாது - எங்கு
போனாலும் ஆசை போகாது
ஆராரோ அடி ஆராரோ - ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ

ஆசைக்குப் பிள்ளை ஆராச்சு, ஆராச்சு
இனி அறுத்துத் தடை செய்ய ஆராய்ச்சி, ஆராய்ச்சி
நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு
ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆபத்து அங்கே தான் உருவாச்சு

ஆனாலும் தூங்குது உன் பாட்டு - இனி
அடுத்தது நீயுந்தான் தாலாட்டு
ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
அசட்டுப் பய புள்ள ஆராரோ



Thursday, March 22, 2012

மையேந்தும் விழியாட

திரைப்படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிகர்கள்: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
பாடல் வரிகள்: வாலி


மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

குழல் தந்த இசையாக... இசை தந்த குயிலாக... குயில் தந்த குரலாக நான் பாடுவேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக...ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்...

விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

கை விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

இளங்காதல் வயதாலே தனியாகினேன்..அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்....

இமை மூடி தூங்காமல் போராடினேன்...உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்... உன் மடிமீது தலை சாய்த்து இளைபாறினேன்...

அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்.. அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

Wednesday, March 7, 2012

மங்கையரில் மகராணி


பாடல் காணொளிக்கு



மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி....

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ....

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ....


படம் : அவளுக்கென்று ஓர் மனம்
குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்


*

Tuesday, February 28, 2012

பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்…

.



பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்…
காணாத கண்களை காணவந்தாள்…
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்

பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்…(2)

மேலாடை தென்றலில் ஆகாகா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்
(பாடாத பாட்டெலாம்)

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா
(பாடாத பாட்டெலாம்)

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து பேசம்மா..
(பாடாத பாட்டெலாம்)

பாடியவர் : PB.ஸ்ரீநிவாஸ்
படம் : வீரத்திருமகன்
இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி

..