Wednesday, June 29, 2011

இரு பறவைகள் மலை முழுவதும்

படம் : நிறம் மாறாத பூக்கள்
குரல் : ஜென்சி
இசை : இளையராஜா

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன

பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாத பூந்தென்றலே
எங்கெங்கும் இதுபோல சோகங்களே
தீராதோ இது மாறாதோ
கலைந்தது கவிதைகள் ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே


படம் : பார் மகளே பார்
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி


நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....

நீரோடும்....

மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கள மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையில் தந்தை
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலில் மேலே ....
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்....

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துனையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

நீரோடும்...

கொடியசைந்ததும் காற்று வந்ததா

படம்: பார்த்தால் பசி தீரும்.
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம். செளந்தர்ராஜன், பி.சுசீலா.



கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

(கொடியசைந்ததும்...)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்தது ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா

(கொடியசைந்ததும்...)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா
ஓடிவந்ததும் தேடி வந்ததௌம்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா உரிமை என்பதா

(கொடியசைந்ததும்...)

உறவுகள் தொடர்கதை



படம்: அவள் அப்படித்தான்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்



உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

(உறவுகள் தொடர்கதை...)

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

(உறவுகள் தொடர்கதை...)

சொல்லாமல் தெரிய வேண்டுமே

பாடல்: சொல்லாமல் தெரிய வேண்டுமே
திரைப்படம்: விளையாட்டுப் பிள்ளை
இசை: மகாதேவன்
பாடியவர்: எஸ்.ஜானகி

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
மறு முறை காணவே மனமும் சென்றது
மறு முறை காணவே மனமும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

தேடிய செல்வம் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது
பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்


பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்

படம்: மணப்பந்தல் (1962)
கண்ணாதாசன் 

விஸ்வ‌நாதன் ‍ ராமமூர்த்தி

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)