Wednesday, November 9, 2011

பொன்னை விரும்பும் பூமியிலே

.



பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை விரும்பும் பூமியிலே)


பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம்: ஆலயமணி


.


Monday, November 7, 2011

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..




கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
வண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
அந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
சந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா
அன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்
கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

படம் - பறக்கும் பாவை
பாடியவர்கள் - டி.எம்.எஸ், பி. சுசீலா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி

.

Tuesday, November 1, 2011

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: திரு.இளையராஜா
பாடல்: திரு.பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள் :பாலசுப்பிரமணியம்.எஸ்.பி ,
                           எஸ்.ஜானகி 


ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்....

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்
ஒரு நாள்...

மஞ்சளின் மஹாராணி
குங்கும பெருந்தேவி
உன்னால் பொன்னாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கதின் நிழலை கண்டேனே

உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே 
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேதம் மாறாதோ
மாறும் நன்னாள்
என்னால் காண்பேனோ
புன்னகையாலே என்னை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று 

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக

மங்கல நான் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் கீதம் நானாக
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவை பார்த்திருப்போம்
ஒரு நாள் 
உன்னோடு ஒரு நாள்
உறவ்னில் ஆட
புதுமைகள் காண
காண்போமே என்னாலும் திருநாள்