Sunday, July 3, 2011

தூங்காத கண்ணென்று ஒன்று.

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)





படம்: குங்குமம்.
இசை : K.V.மகாதேவன்.
எழுதியவர் : கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.

0 comments: